பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை உடனே விடுவிக்க வேண்டும் என ஐ.நா.குழு வலியுறுத்தியது.
இம்ரான் கான் பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சிறையில் உள்ளார்.
அவரின் தடுப்புக் காவல் தன்னிச்சையானது மற்றும் சர்வதேச சட்டத்தை மீறுவதாக உள்ளதாகவும், எனவே அவரை உடனே விடுவிக்க வேண்டும் எனவும் ஐ.நா. குழு வலியுறுத்தியது. இது தங்கள் நாட்டின் உள் விவகாரம் என பாகிஸ்தான் குறிப்பிட்டுள்ளது.