கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில், வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் நைரோபியில் பொதுமக்கள் தன்னெழுச்சியாக மீண்டும் போராட்டத்தை தொடங்கினர்.
நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் கென்யாவில், வரியை உயர்த்த போவதாக அந்த நாட்டு அதிபர் ரூடோ அறிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற போராட்டத்தில் 39 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் போராட்டத்தை அவர்கள் தொடங்கியுள்ளனர். அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தாங்கள் தயாராக இல்லை என அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.