பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 2-ம் கட்டமாக இன்று, நடிகர் விஜய் கல்வி ஊக்கத்தொகையை வழங்கினார்.
10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் கடந்த ஆண்டு அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, தொகுதி வாரியாக நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டும் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில், முதற்கட்டமாக, சென்னை திருவான்மியூரில் கடந்த 28-ம் தேதி நடைபெற்ற விழாவில், கோவை, ஈரோடு உள்ளிட்ட 21 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகையை விஜய் வழங்கினார்.
இந்நிலையில், 2-ம் கட்டமாக இன்று சென்னை, செங்கல்பட்டு உட்பட 19 மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு நடிகர் விஜய் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகையை வழங்கினார்.