சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே சகோதரர்கள் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இளம்பெண் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் நாச்சிகுளம் கிராமத்தை சேர்ந்த சகோதரர்களான ஜெயசூர்யா, சுபாஷ் ஆகியோர் மீது கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதனால் ஊரைவிட்டு வெளியேறிய இருவரும் சிவகங்கையில் தங்கி வேலைப்பார்த்து வந்தனர். இந்நிலையில் காளையார்கோவில் பகுதியில் தங்கியிருந்த இருவரையும் முன்விரோதம் காரணமாக மர்ம கும்பல் வெட்டிப்படுகொலை செய்தது.
இந்த வழக்கில் குற்றவாளிகளை தேடி வந்த போலீசார் கொலையில் சம்மந்தப்பட்ட இளம்பெண் உள்பட 7 பேரை கைது செய்தனர்.