தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை பெற்றுத் தர வலியுறுத்தி வருகிற 16ம் தேதி தஞ்சை பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட போவதாக காவிரி உரிமை மீட்பு குழு அறிவித்து உள்ளது.
தஞ்சையில் காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்காததால், டெல்டா மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் வறட்சியாக உள்ளதாகவும், எனவே விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.