தென்காசி அருகே தரிசு நில சான்று வழங்க 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் தென்காசி வருவாய் ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.
மத்தளம்பாறை பகுதியைச் சேர்ந்த கதிரேசன் என்பவர், தனது 3 சென்ட் நிலத்தில் வணிக கடைகள் கட்டுவதற்கான தரிசு நில சான்றுகோரி தென்காசி தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பம் செய்திருந்தார்.
தரிசு நில சான்று வழங்க வருவாய் ஆய்வாளர் தர்மராஜன் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரையின் பேரில் ரசாயனம் தடவிய 5 ஆயிரம் ரூபாய் பணத்தை கதிரேசன் கொடுத்த போது, வருவாய் ஆய்வாளர் தர்மராஜன் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.