விருதுநகரில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஆனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில், ஆனி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு 6ம் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி வழங்கியது.
இதனையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த ஏராளமான பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.