தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் தண்ணீர் திறக்கப்பட்டது.
வைகை அணையில் இருந்து பெரியாறு பிரதானக் கால்வாயில் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
இதனையடுத்து திண்டுக்கல், மதுரையில் உள்ள சுமார் 45 ஆயிரத்து 41 ஏக்கர் இருபோக பாசன நிலங்களின் முதல் போக பாசனத்துக்காக வைகை அணையில் இருந்து இன்று முதல் 120 நாள்களுக்கு தண்ணீா் திறக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்ட ஆட்சியர்கள் கலந்துகொண்டனர்.