நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக மலைப்பாதைகளில் உருவாகியுள்ள புதிய அருவிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
கூடலூர், பந்தலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 1 வாரத்துக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது.
இதனால் வனப்பகுதியின் நடுவே அமைந்துள்ள சிறு சிறு நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
மேலும் உதகையில் இருந்து கூடலூர் செல்லும் சாலையில் உள்ள மலைப்பாதைகளில் கனமழை காரணமாக உருவாகியுள்ள புதிய அருவிகளை அவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.