பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.
தொடக்கப்பள்ளி தலைமைஆசிரியரின் பதவி உயர்வு தொடர்பான வழக்கு முடியும் வரை மாறுதல் கலந்தாய்வு நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 150க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி அவர்களை போலீசார் கைது செய்தனர்.