இன்றைக்கு நாய் கூட பி.ஏ பட்டம் வாங்குவதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நீட் தேர்வுக்கு எதிராக திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ஆர்.எஸ்.பாரதி, பட்டப்படிப்பை அழிப்பதற்காகவே நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது என்றார்.
தான் படிக்கின்ற காலத்தில் ஊரில் ஒருவர் தான் பி.ஏ பட்டம் வாங்க முடிந்தது என்றும் ஆனால் இன்றைக்கு நாய் கூட பி.ஏ. பட்டம் வாங்குகிறது என்றால், அதற்கு காரணம் திராவிட இயக்கம் போட்ட பிச்சைதான் எனவும் தெரிவித்தார்.
கொழுப்பெடுத்தவர்கள் கள்ளச்சாராயம் குடித்து இறந்ததாக ஏற்கெனவே பேசிய ஆர்.எஸ். பாரதி தற்போது மீண்டும் சர்ச்சையாக பேசியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.