தமிழக அரசு 100 மில்லி லிட்டர் பிளாஸ்டிக் பாட்டிலில் மது விற்பனை செய்வது குறித்து தீவிரமாக பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 60-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
அரசு விற்பனை செய்யும் மது பாட்டில்களின் விலை அதிகமாக இருப்பதால் ஏழை மக்கள் கள்ளச்சாராயத்தை நாடுவதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து குறைந்த விலையில் ‘டெட்ரா பேக்’ பாக்கெட்டுகளில் மது விற்பனையைத் தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும், மலிவு விலைவில் மது விற்பனையை தொடங்குவது குறித்து தமிழக அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
‘டெட்ரா பேக்’ மூலம் மது தயாரிப்பதற்கான வசதிகளை ஏற்படுத்த அதிக காலம் தேவைப்படும் என்பதால், 100 மில்லி லிட்டர் பிளாஸ்டிக் பாட்டிலில் மது விற்பனை செய்வது குறித்து தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனினும், இந்த திட்டம் குறித்த பரிசீலனை ஆரம்பக்கட்டத்தில் உள்ளதாகவும், தகுந்த முடிவெடுத்தவுடன் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.