ககன்யான் விண்கலம் டிசம்பர் மாதத்துக்குள் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் சோமநாத் தெரிவித்துள்ளார்.
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் விண்கல சோதனையில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக பிரசாந்த் பாலகிருஷ்ணன், அங்கத் பிரதாப், அஜித் கிருஷ்ணன், சுக்லா ஆகிய நான்கு விண்வெளி வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
பல்வேறு தடங்கல் காரணமாக ககன்யான் விண்கலத்தை விண்ணில் செலுத்தும் முயற்சி தடைபட்டு வந்த நிலையில், டிசம்பருக்குள் இந்தத் திட்டம் நிறைவேற்றப்படும் என இஸ்ரோ தலைவர் சோமநாத் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் செய்தியாளரிடம் பேசிய அவர், நிலவின் தென்துருவத்தை ஆராய அனுப்பப்பட்ட சந்திரயான்-3 நன்றாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
ககன்யான் விண்கலத்தை விண்வெளிக்குச் செலுத்துவதற்கான பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், டிசம்பருக்குள் இந்தத் திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.