திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கஞ்சா போதையில் தள்ளாடுவதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள இளைஞர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலசமுத்திரம் அருகே வசித்து வரும் சில இளைஞர்கள் தாங்கள் கஞ்சா போதையில் தள்ளாடுவதை வீடியோ எடுத்து, அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர்.
போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.