நீட் தேர்வில் தேர்ச்சி அடையாத மருத்துவக் கல்லூரி முதல்வர்களின் பிள்ளைகள் கூட மருத்துவம் படிக்க முடியாது எனவும், இது கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள புரட்சி என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோவிலில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து தான் இருக்கின்றது எனவும் திமுக மாணவர் அணியினர் நீட்டை எதிர்த்து போராடி வருகின்றனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து நீட்டை எதிர்த்து தான் என்று கூறிய நிலையில் மக்களை ஏமாற்றும் செயல். என்றும் நீட்டைப் பற்றி தவறான கருத்து பரவ விடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
நீட் தேர்வில் முன்னால் அரசு பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்போது செல்வந்தர்களின் பிள்ளைகள் தனியார் பள்ளி மாணவர்கள்தான் அதிக மருத்துவம் படித்தனர்.
குறிப்பாக நாமக்கல் போன்ற மாவட்ட மாணவர்கள் மருத்துவத்துறையில் அதிகம் சேர்ந்தனர். தற்போது நீட்டிற்கு பின்பு அரியலூர் போன்ற பின்தங்கிய மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் கூட மருத்துவத்தில் தேர்வாகின்றனர்.
நீட் பற்றி அரசியல்வாதிகள் தான் தவறான கண்ணோட்டத்தை பரவ விடுகின்றனர். தற்போது இரண்டு லட்சம் மாணவர்கள் நீட் எழுத உள்ளனர். நீட்டை ஆதரித்தாலும் எதிர்த்தாலும் தற்போது நடைமுறையில் உள்ளது.
எனவே மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் பயிற்சி கொடுக்க வேண்டும், பயிற்சி மையங்களை அதிகரிக்க வேண்டும். சாதாரண மாணவர்களுக்கு நீட் உதவி செய்கிறது.
மருத்துவக் கல்லூரி முதலாளிகள் கூட நீட் இல்லாமல் தங்கள் பிள்ளைகளை மருத்துவம் சேர்க்க முடியாது. இது ஒரு புரட்சி, மாணவர்கள் நீட்டை ஏற்றுக் கொள்கின்றனர்.
அதை அரசியல்வாதிகள் தான் ஏற்றுக் கொள்வதில்லை. திமுகவின் ஆர்.எஸ். பாரதி பேசினால் அதை சர்வ சாதாரணமாக விட்டு விடுவார்கள்.
பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களை விமர்சித்து மோசமான விமர்சனம் செய்வது திமுகவினரால் மட்டுமே முடியும்.
அனைத்து படிப்புகளுக்கும் மதிப்பு உண்டு, நான் படித்ததை அவர்கள் செய்த உதவி என்கின்றனர். அனைவருக்கும் திறமையுண்டு அனைத்திற்கும் உரிமை கொண்டாடக்கூடாது என தெரிவித்தார்.