பிரதமரின் உரையின்போது குறுக்கிட்டு அரசியலமைப்பு சட்டத்தை எதிர்க்கட்சிகள் அவமதித்துவிட்டதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
நாடாளுமன்றத்தில் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது ஒவ்வொருவரும் கேட்க வேண்டும் என்றும், ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் பேச்சுரிமை இருப்பதாகவும் தெரிவித்தார்.
மக்களவையில் பிரதமர் பேசியபோது காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் வேண்டுமென்றே குறுக்கிட்டு, ஒட்டுமொத்த உரைக்கும் இடையூறு விளைவித்ததாக கிரண் ரிஜிஜு குற்றம்சாட்டினார்.
நீட் தேர்வு விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி மாநிலங்களவையில் பேசியதை சுட்டிக்காட்டிய அமைச்சர் கிரண் ரிஜிஜு, எதிர்க்கட்சியினர் காலை, மாலை, இரவு என 24 மணிநேரமும் பிரதமரை விமர்சித்த போதிலும், தங்களுக்கு கருத்து சுதந்திரம் இல்லை எனக் குற்றம்சாட்டுவதாக விமர்சித்தார்.