திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட நபரின் வீடியோ வெளியாகியுள்ளது.
மத்திய பேருந்து நிலையத்துக்கு மதுபோதையில் வந்த நபர் அரசுப் பேருந்தில் ஏற முயன்றார். அப்போது அவரை பேருந்தில் அனுமதிக்காமல் நடத்துனர் தடுத்து நிறுத்தினார்.
இதனால் பேருந்து நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறி சாலையில் அமர்ந்து போதை ஆசாமி ரகளையில் ஈடுபட்டார்.
அப்போது அங்குவந்த காவல்துறையினர் போதை ஆசாமியை வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.