ரஷ்யா நாட்டின் அதிபர் புதின் அழைப்பின் பேரில், இந்திய பிரதமர் மோடி ரஷ்யா செல்கிறார்.
ஜூலை 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை ரஷ்யா மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கு அவர் பயணம் மேற்கொள்கிறார் என இந்திய வெளியுறவுத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த சந்திப்பின் போது, இருநாட்டு உறவுகள் மற்றும் நடப்பு சூழல்கள் உள்ளிட்டவை குறித்து பேசப்படும் என தகவல் வெளிகியாகியுள்ளது. உலக அரங்கில் இந்தியாவும், ரஷ்யாவும் நட்பு நாடாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.