இங்கிலாந்து நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் ரிஷி சுனக், தனது மனைவி அசஷிதா மூர்த்தியுடன் சென்று வாக்களித்தார்.
நார்த் யார்சைஷரில் ரிச்மாண்ட் அருகே உள்ள வாக்குச்சாவடியில் தங்களது வாக்கை செலுத்தினர். இங்கிலாந்து நாடாளுமன்றத் தேர்தல், இந்திய நேரப்படி இன்று காலை 7 மணி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மொத்தம் உள்ள 650 தொகுதிகளுக்கும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியான பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சியும் தொழிலாளர் கட்சியும் நேருக்கு நேர் மோதுகின்றன.