டி20 உலகக் கோப்பைை வென்ற இந்திய அணி வீரர்கள், மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில், திறந்த பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்டனர்.
பின்னர், மைதானத்தில், வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில், வீரர்களுக்கு 125 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.
இந்நிலையில், பாராட்டு விழா நடைபெறும் மைதானத்தில், ஏராளமான ரசிகர்கள் உற்சாகத்துடன் குவிந்துள்ளனர்.
மேலும், அவர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் ஆராவாரம் செய்து, கிரிக்கெட் வீரர்களை உற்சாகப்படுத்தினர்.
முன்னதாக, இன்று காலை கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.