நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் கடன் தொல்லையால் விஷ ஊசி செலுத்தி தம்பதியர் தற்கொலை செய்து கொண்டனர்.
கேரளாவை சேர்ந்த ஆண்டோவர்கீஸ் – ஜிஸ்மால் தம்பதியினர், குழந்தையின்மை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.
இதனால் ஏற்பட்ட கடனை கட்ட முடியாமல் இருவரும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வேளாங்கண்ணியில் அறை எடுத்து தங்கியுள்ள தம்பதியர், எலி பேஸ்டை ஊசி மூலமாக உடலில் செலுத்தி தற்கொலை செய்துகொண்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.