அசாமின் காசிரங்கா தேசிய பூங்காவில் வெள்ளத்தில் சிக்கி 17 வன விலங்குகள் உயிரிழந்தன.
அசாமில் பருவமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ள நீர் தேங்கி நிற்கிறது.
இந்நிலையில் காஸிரங்கா தேசிய பூங்காவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் பன்றி, மான், உள்ளிட்ட வன விலங்குகள் நீரில் மூழ்கி உயிரிழந்தன.
72 விலங்குகள் வெள்ள நீரில் இருந்து மீட்கப்பட்டதாகவும், 32 வன விலங்குகள் சிகிச்சையில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.