சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூரில் நக்சல்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் வசிக்கும் மக்களுக்காக ஆற்றின் நடுவே பாதுகாப்புப் படையினர் ரோப் வே அமைத்துள்ளனர்.
சிந்தவாகு ஆற்றை கடப்பதற்காக சிறிய படகுகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் வெள்ளப்பெருக்கு சமயங்களில் உயிரிழப்பு ஏற்படுவது வாடிக்கையாகி வந்தது.
இதனால் துணை ராணுவப் படையினரின் பலத்த பாதுகாப்பின் கீழ், சிந்தவாகு ஆற்றில் பாலம் விரைவாக கட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்காலிகமாக மக்களின் சிரமத்தை போக்குவதற்காக பாதுகாப்பு படையினர் ஆற்றில் ரோப்வே அமைத்துள்ளதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.