தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ராகுல் காந்தியின் இந்து விரோத பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா தொண்டர்களை போலீசார் கைது செய்தனர்.
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது, பாஜகவினரை உண்மையான இந்துக்கள் அல்ல என ராகுல் விமர்சித்ததற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் ராகுலின் இந்து விரோத பேச்சைக் கண்டித்து, பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.