விழுப்புரம் மாவட்டம் விக்கிராவாண்டி இடைதேர்தலை ஒட்டி பா.ம.க. வேட்பாளர் சி. அன்புமணிக்கு ஆதரவாக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸின் இளைய மகள் சங்கமித்ரா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
நல்லாத்தூர், சிறுவாலை உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி மாம்பழம் சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.
அப்போது திமுகவினரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதால், பாமகவினர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.