திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே பட்டா நிலத்தில் கட்டப்பட்ட வீட்டை காலி செய்யக் கோரி அதிகாரிகள் மின் இணைப்பை துண்டித்ததால் விரக்தியடைந்த இளைஞர் தீக்குளித்து படுகாயமடைந்தார்.
கோட்டைகரையைச் சேர்ந்த கல்யாணி என்பவர் அப்பகுதியில் தனக்கு தானமாக வழங்கப்பட்ட ஒன்றரை செண்ட் பட்டா நிலத்தில் வீடு கட்டி 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்துள்ளார்.
இவரது வீடு ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டுள்ளதால் அதனை அகற்றுமாறு புகாரளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதன் பேரில் வீட்டை காலி செய்யுமாறு பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் மிரட்டியதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் வீட்டின் மின் இணைப்பையும் அதிகாரிகள் துண்டித்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த கல்யாணியின் இளைய மகன் ராஜ்குமார் வீட்டை பூட்டிக்கொண்டு உடலின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார்.
இதனையடுத்து அவர் 50 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், மேல்சிகிச்சைக்காக சென்னை கே.எம்.சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.