தமிழக பாஜக செயற்குழு கூட்டம் வரும் 6-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், மோடி மூன்றாவது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும், தமிழகத்தில், இதுவரை இல்லாத அளவு பாஜவின் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது. இந்நிலையில், தமிழக பா.ஜ.க செயற்குழ கூட்டம் வரும் 6 -ம் தேதி சென்னை திருவேற்காட்டில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடசாலபதி திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
இதில் தமிழக பா.ஜ.க மாநில, மாவட்ட நிர்வாகிகள் நான்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டம் தமிழகத்தின் எதிர்கால அரசியல் மாற்றத்திற்கான அடித்தளமாக அமையும் என்று கூறப்படுகிறது.