மும்பையில் இந்திய கிரிக்கெட் அணிக்கு நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 10-ற்கும் மேற்பட்ட ரசிகர்கள் காயமடைந்தனர்.
மும்பையில் டி-20 உலகக்கோப்பையுடன் திறந்தவெளி பேருந்தில் இந்திய வீரர்கள் பேரணியாக வலம் வந்தனர். அவர்களை காண்பதற்காக, கொட்டும் மழைக்கு இடையே பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர்.
மரைன் டிரைவ் பகுதியில் சாலைகளில் இரு புறமும் ரசிகர்கள் திரண்டதால், கூட்ட நெரிசலில் சிக்கி 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஒரு சிலர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதில் ஒருவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகமும்பை போலீஸார் தெரிவித்துள்ளனர். ஊர்வலம் நடந்த மும்பை மெரைன் ட்ரைவ் பகுதி முழுவதும் குப்பைகளாக காட்சியளிக்கும் நிலையில், சாலைகளை சுத்தம் செய்யும் பணிகளில் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டனர்.