ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, வரும் 15ஆம் தேதி திறக்கப்படவுள்ளது.
புகழ்பெற்ற சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களிலும், விஷூ, ஓணம் பண்டிகை நாட்களிலும், பங்குனி உத்திரம் திருவிழா நாட்களிலும் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் ஆடி மாத பூஜைக்காக வருகிற 15-ஆம் தேதி கோயில் நடை திறக்கப்படவுள்ளது. அதனைத்தொடர்ந்து 16ம் தேதி முதல் 20ம் தேதி வரை நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜை வழிபாடுகள் நடைபெற்று இரவு பத்தரை மணியளவில் கோவில் நடை அடைக்கப்படவுள்ளது.
பக்தர்கள் வழக்கம்போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.