கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் முதல் கோவை ரயில் நிலையம் வரையிலான வழித்தடத்தில் இரட்டை இருப்பு பாதை அமைக்கக்கோரி, மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை சந்தித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மனு அளித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், மேட்டுப்பாளையம் மற்றும் காரமடை பகுதிகளை சேர்ந்த பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக மனுவை வழங்கியதாகவும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.