ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்.
ஆனி மாத அமாவாசை முன்னிட்டு இன்று முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்க உலகப் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
அக்னி தீர்த்த கடற்கரைக்கு சென்ற பக்தர்கள் மறைந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் பூஜைக்காக அழைத்து வந்த பசுவிற்கு பழங்கள் கீரை வகைகள் கொடுத்து வழிபட்டனர். இதனையடுத்து ராமேஸ்வரம் கடற்கரையில் ஏராளமானோர் போலீசார் குவிக்கப்பட்டனர்.