சென்னையில் 120 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.
மக்களவை தேர்தல் பணிகளுக்காக ஏற்கனவே பணியிடமாற்றம் செய்யப்பட்ட காவலர்கள் தற்போது படிபடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
இதற்கான மனுக்களை காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் மற்றும் சென்னை காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் ஆகியோர் காவலர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டனர்.
அதன்படி, 120 காவல் ஆய்வாளர்கள் ஒரே நேரத்தில் பணியிடமாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.