அயோத்தி சரயு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக வட இந்தியாவில் கனமழை பெய்து வருகிறது. இதனால், சரயு ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல் மும்பையில் பரவலாக மழை பெய்ததால், பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகினர். தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கியதால், சீரமைப்பு நடவடிக்கையை மாநகராட்சி துரிதப்படுத்தியது. இதேபோல உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.