ஆசிய அளவிலான ஸ்குவாஷ் போட்டியில் வெள்ளி பதக்கம் வெனஂற தூத்துக்குடி மாணவிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்தார்.
பாகிஸ்தானில் நடைபெற்ற ஆசிய அளவிளான ஸ்குவாஷ் போட்டியில் 13 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் தூத்துக்குடியை சேர்ந்த 7ம் வகுப்பு மாணவி கவுஷிகா கலந்து கொண்டு வெள்ளி பதக்கம் வென்றார்.
வெற்றி பெற்ற மாணவிக்கு பாஜக மாவட்டத் தலைவர் சித்ராங்கதன் தலைமையில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செல்போன் மூலம் தொடர்புகொண்டு மாணவி கவுசிகாவை மென்மேலும் பல்வேறு சாதனைகள் தொடர வாழ்த்தினார்.