திருச்சி அருகே ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
திருச்சி அடுத்துள்ள லால்குடி பகுதியில் த.வெ.க. பிரமுகர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை வழக்கில் தொடர்புடைய கலைப்புலி ராஜா என்ற ரவுடியை மணச்சநல்லூர் அருகே போலீசார் சுற்றி வளைத்தனர்.
அப்போது, போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றபோது துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். மேலும், ரவுடி கலைப்புலி ராஜாவின் நண்பரான ஸ்ரீநாத் என்பவரை போலீசார் துரத்திச் சென்றபோது, அவருக்கு வலது கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரவுடி கலைப்புலி ராஜாவுக்கு லால்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.