பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் முதல்முறையாக தமிழர் ஒருவர் வெற்றிவாகை சூடியுள்ளார்.
பிரிட்டன் பொதுத் தேர்தலில் தொழிலாளர் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க உள்ளது. அந்தக் கட்சியின் சார்பில் ஸ்ட்ராட்ஃபோர்ட் அன்ட் போவ் தொகுதியில் களமிறங்கிய தமிழரான உமா குமரன், வெற்றி பெற்றுள்ளார்.
இதன்மூலம் பிரிட்டன் நாடாளுமன்றத்துக்குச் செல்லும் முதல் தமிழர் என்ற பெருமையை உமா குமரன் தட்டிச் சென்றுள்ளார்.