டெல்லி குடிநீர் வழங்கல் வாரிய கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை முறைகேடு வழக்கில், அமலாக்கத் துறையினர் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் சோதனை நடத்தி, 41 லட்ச ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.
ஆம் ஆத்மி கட்சி ஆளும் டெல்லியில், குடிநீர் வழங்கல் வாரியத்தின் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகளின் செயல்பாட்டில் ஊழல் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக டெல்லி குடிநீர் வழங்கல் வாரியத்தின் கிளை அலுவலகங்கள் அமைந்துள்ள டெல்லி, அகமதாபாத், மும்பை மற்றும் ஹைதராபாத்தில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி 41 லட்ச ரூபாயையும், சில ஆவணங்களையும் கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.