ஈரான் பொதுத் தேர்தலையொட்டி, டெல்லியில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சி கடந்த மே 19-ஆம் தேதி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது.
அந்த வகையில் டெல்லியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் இந்தியாவுக்கான ஈரான் தூதர் இராஜ் இலாஹி உள்பட தூதரக அலுவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வாக்குச்சீட்டு முறையில் வாக்களித்தனர். ஓரிரு தினங்களில் தேர்தல் முடிவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.