ஜப்பானில் ரயில்வே பராமரிப்புப் பணிகளில் 40 அடி உயர பிரம்மாண்ட ரோபோவை ரயில்வே நிர்வாகம் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.
பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள போதிய ஆட்கள் இல்லாததால், ரயில்வே நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது.
இந்த ரோபோபாவால் 40 கிலோ எடை வரை தூக்க இயலும். முதற்கட்டமாக இந்த ரோபோ, தண்டவாளங்களுக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டுவது, வர்ணம் பூசுவது போன்ற பணிகளுக்கு ஈடுபடுத்தப்படுகிறது.