பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு தனது வீட்டுக்கு முன்பு நின்றுகொண்டிருந்தார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியது. இதில் படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து தப்பியோடிய மர்ம கும்பலை போலீசார் 6 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததை ஒப்புக்கொண்டு பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் சகோதரர் ஆற்காடு பாலு உள்பட 8 பேர் அண்ணாநகர் துணை ஆணையர் முன் சரணடைந்தனர்.
இந்நிலையில், ஆர்ம்ஸ்டாங்கை வெட்டிய கும்பல் தப்பி ஓடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.