தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய பெண்கள் அணி தோல்வியடைந்தது.
இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்தது. 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.