சமூக நீதிக்கு எதிரான போலி திராவிட மாடல்!- எல்.முருகன்
Jul 14, 2026, 11:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சமூக நீதிக்கு எதிரான போலி திராவிட மாடல்!- எல்.முருகன்

Murugesan M by Murugesan M
Jul 6, 2024, 11:59 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் எல்.முருகன் வெளியிட்டுள்ள பதிவில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து அதிர்ச்சி அடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், அவரது கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாகவும் எல்.முருகன் கூறியுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பொறுப்பில் இருக்கும் காவல்துறையும், உளவுத் துறையும் முற்றிலும் சீரழிந்து, சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளதையே இந்த படுகொலை நிரூபித்துள்ளதாக எல்.முருகன் கூறியுள்ளார்.

வேங்கை வயல், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் ஆகிய சம்பவத்தில் ஒடுக்கப்பட்ட மக்களே அதிகம் பாதிக்கப்பட்ட நிலையில், அதில் திமுக அரசு மெத்தனமாக இருந்ததன் தொடர்ச்சியே ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் வந்து நிற்பதாகவும் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட செய்தி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறியுள்ளார்.

இந்தத் துயரமான நேரத்தில், அவரது குடும்பத்தினர் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் தொண்டர்களுடன் தமிழக பாஜக துணை நிற்பதாகவும் அண்ணாமலை கூறியுள்ளார்.

நம் சமூகத்தில் வன்முறைக்கும் மிருகத்தனத்துக்கும் இடமில்லை என்றும், ஆனால் கடந்த 3 ஆண்டு கால திமுக ஆட்சியில், தமிழகத்தில் அதுவே வழக்கமாகி விட்டதாகவும் அண்ணாமலை குற்றச்சாட்டியுள்ளார்.

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துவிட்டு, மாநிலத்தின் முதலமைச்சராகத் தொடரும் தார்மீக உரிமை தனக்கு இருக்கிறதா என்று, மு.க.ஸ்டாலின் தம்மையே கேட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

Tags: Fake Dravidian model against social justice!- L. Murugan
ShareTweetSendShare
Previous Post

டி20 தொடரின் முதல் ஆட்டம்: இந்தியா – ஜிம்பாப்வே மோதல்

Next Post

கிரிக்கெட் வீரர்களுக்கு ரூ.11 கோடி- மகாராஷ்டிர முதல்வர்!

Related News

நீதிபதி தலைமையில் குழு அமைத்து விரிவான விசாரணை நடத்துக;காடேஸ்வரா சுப்பிரமணியம்

விசாரணை கைதி மர்ம மரணம்; உறவினர்கள் சாலை மறியல்

தவெக ஆட்சி முடியும்போது கடன் ரூ.15 லட்சம் கோடியாக இருக்கும்; அண்ணாமலை

இந்திய -பசிபிக் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி : இந்தியாவுடன் கரம்கோர்க்கும் நாடுகள் – சிறப்பு தொகுப்பு!

இந்தியா வெறும் சந்தை மட்டுமல்ல, வளர்ச்சிக்கான ஒரு உந்துதளம் – நியூசிலாந்தில் பிரதமர் மோடி பேசியது என்ன? – சிறப்பு தொகுப்பு!

Operation Amistad : வெனிசுலாவில் பெரும் வரவேற்பை பெற்ற இந்தியாவின் மனிதாபிமானப் பேரிடர் மீட்புப் பணி – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க : ஜானகியின் உடலுக்கு பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி!

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதாக ஈரான் மீண்டும் அறிவிப்பு : சைப்ரஸ் நாட்டு கப்பல் மீது தாக்குதல்!

FIFA உலக கோப்பை கால்பந்து தொடர் – அர்ஜென்டினா,இங்கிலாந்து அணிகள் அரையிறுதி போட்டிக்கு முன்னேற்றம்!

ரேசன் பொருள்கள் தொடர்பான புகார்களுக்கு விரைவில் வாட்ஸ் அப் எண்கள் – அமைச்சர் வெங்கடரமணன்

புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்தாமல் இருப்பது சரியான அணுகுமுறை அல்ல – ஆளுநர் அர்லேகர்

ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட  இசையரசியின் மறைவை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

எஸ். ஜானகியின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் – கர்நாடக அரசு அறிவிப்பு!

வா வெண்ணிலா உன்னை தானே வானம் தேடுதே – பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி காலமானார்!

வியட்நாம் படகு விபத்து – உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல்!

வியட்நாம் படகு விபத்து – தமிழகத்தை சேர்ந்த 10 பேர் உள்ளிட்ட 15 பேர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies