தென்காசி மாவட்டம் சுரண்டையில் போலி ஆவணங்கள் தயார் செய்து நில அபகரிப்பில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
காமராஜ் நகரைச் சேர்ந்த பாஸ்கருக்கு சுரண்டையில் இருந்து இரட்டைகுளம் செல்லும் சாலையில் 48 சென்ட் நிலம் உள்ளது.
இவரது நிலத்தில் சிவகுருநாதபுரத்தைச் சேர்ந்த டென்னிசன் என்பவர் கம்பி வேலி அமைத்துள்ளார். இதனால் இவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, தனது பெயரில் நிலம் இருப்பதாக கூறி டென்னிசன் பத்திரத்தை காட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பாஸ்கர், இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாரளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் போலியான ஆவணங்களை தயார் செய்து சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை சென்னிசன் அபகரிக்க முயன்றது தெரியவந்தது.
இதனையடுத்து சென்னிசன் உள்பட 3 பேரை கைது செய்த போலீசா,ர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.