தருமபுரியில் உள்ள ஒகேனக்கல்லில் நீர்வரத்து ஒரே நாளில் 3 ஆயிரம் கன அடி அதிகரித்துள்ளது.
காவிரிநீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை மற்றும் கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பால், ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அதன்படி ஆயிரத்து 500 கன அடியாக இருந்த நீர்வரத்து 4 ஆயிரத்து 500 கன அடியாக உயர்ந்துள்ளது. தொடர்மழை காரணமாக நீர்வரத்து மேலும் அதிகரிக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.