தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டியின் 8வது தொடரில் சேப்பாக் அணியை வீழ்த்தி கோவை அணி வெற்றி பெற்றது.
சேலத்தில் நடைபெற்ற போட்டியில் கோவை அணி முதலில் பேட்டிங் செய்தது, அதிரடியாக ஆடிய கோவை அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 141 ரன்களை எடுத்தது.
இதையடுத்து களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர் முடிவில் 128 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதனால் 13 ரன்கள் வித்தியாசத்தில் கோவை அணி அபார வெற்றி பெற்றது.