அரியலூரில் நீதிமன்ற உத்தரவின்படி இழப்பீடு வழங்காத தமிழ்நாடு அரசுப் பேருந்தை நீதிமன்ற பணியாளர்கள் ஜப்தி செய்தனர்.
கடந்த 2019-ம் ஆண்டு ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த முதியவர் மீது அரசுப்பேருந்து மோதிய விபத்தில், அவர் படுகாயமடைந்தார்.
இது குறித்த வழக்கில் முதியவருக்கு 14 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்கக்கோரி தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் தற்போது வரை அந்த தொகையை அரசு வழங்காததால் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.