திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் கடற்கரை அருகே வைக்கப்பட்டிருந்த மீன்பிடி வலைகள் தீயில் எரிந்து சேதமானது.
பசியாவரம் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் சிலர் மீன்பிடித்து விட்டு 4 லட்ச ரூபாய் மதிப்பிலான வலைகளை கரையின் அருகே வைத்துள்ளனர்.
அப்போது தீடீரென வலைகள் தீயில் கருகி சேதமானது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.