சிவகங்கையில் உள்ள முனீஸ்வரர் ஆலயத்தின் பூச்சொறிதல் விழாவை ஒட்டி மாட்டுவண்டி பந்தயம் கோலாகலமாக நடத்தப்பட்டது.
சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 24 ஜோடி மாடுகள் பந்தயத்தில் களமிறக்கப்பட்டன.
பெரிய மாடு, சிறிய மாடு என இரு பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில், வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும் அதன் சாரதிகளுக்கும் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது.