தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இன்று கூட்டப்பட்ட செயற்குழு கூட்டத்தில் தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்காத கமல், சிம்பு, தனுஷ் விஷால் ஆகிய நான்கு நடிகர்களுக்கு வரும் காலங்களில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் எந்த ஒரு ஒத்துழைப்பும் வழங்காது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது!
கடந்த ஜூன் மாதம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கான செயற்குழு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில் திருப்பதி பிரதர்ஸ் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடிகர் கமல்ஹாசனின், வேணாண்டாள் முரளி கொடுத்த புகாரின் அடிப்படையில் தனுஷும், வேல்ஸ் நிறுவனத்திற்கு படம் செய்து தருவதாக காலதாமதம் செய்து வரும் சிம்பு, தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாக கணக்கு வழக்குகளை சரியாக கையாள்வதில் முரண் என்ற வகையில் விஷால் உள்ளிட்ட நான்கு நடிகர்கள் மீதான பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டது.
வரும் காலங்களில் தயாரிப்பாளர்கள் சங்கம் இவர்களுக்கு எவ்வித ஒத்துழைப்பும் வழங்கக் கூடாது எனவும் தீர்மானம் நிறைவேற்றயுள்ளனர்.
இந்நிலையில் மீண்டும் இன்று கூடிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயற்குழு கூட்டத்தில், பொதுக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட கமல், சிம்பு, தனுஷ், விஷால் உள்ளிட்ட நான்கு நடிகர்களுக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் எவ்வித ஒத்துழைப்பும் வருங்காலங்களில் வழங்காது என தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.