பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்ட அவரது ஆதரவாளர்களை காவல்துறையினர், குண்டுக்கட்டாக கைது செய்தனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை நேற்று 6 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடியது. அவரது உடல் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இந்தக் கொலை தொடர்பாக, 8 பேர் சரணடைந்துள்ள நிலையில், உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டுமென, ராஜீவ் காந்தி மருத்துவமனை முன்பு ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை அடுத்து, போலீஸார் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், அவர்கள் சாலை மறியலைக் கைவிட மறுத்ததால், ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்களை போலீஸார் குண்டுக்கட்டாக கைது செய்தனர்.